ழக்கம்போல் இந்த ஆண்டும் தனது பிறந்தநாளின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னையில் இல்லை. ஆனாலும் தங்களது தலைவரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடித் தீர்த்துவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.

Advertisment

rajinib'day

சென்னை தியாகராய நகரிலுள்ள சோஷியல் க்ளப்பின் செகரட்டரியும் தென்சென்னை கிழக்கு மா.செ.வுமான சினோரா அசோக், பிரம்மாண்ட கேக் வெட்டியும், காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

rajinib'day

Advertisment

rajinib'day

வடசென்னை மா.செ. சந்தானம் தலைமையில் பிறந்தநாள் விழா களைகட்டியது.

சென்னை தேனாம் பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலில் வட்டச் செயலாளர் பாலன் தலைமையிலான ரசிகர் மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு ரஜினியின் முன்னாள் உதவியாளர் ஜெயராமனை அழைத்துக் கௌரவப்படுத்தினார்கள். ப.செ.க்கள் தேனா முனுசாமி, சுரேஷ்குமார். து.செ.க்கள் மூர்த்தி, நந்தா, ஆட்டோ முருகன், ஆனந்த் மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.